ashroff shihabdeen

2008ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுதிக்கான அரச சாஹித்திய தேசிய விருது ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ நூலுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 14.09.2009 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விழாவின் போது இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

 ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதிக்கு 2008ம் ஆண்டுக்கான தமிழியல் விருது கிடைத்துள்ளது. கடந்த 09.05.2010 அன்று மட்டக்களப்பு ஆசிரய கலாசாலை மண்டபத்தில் இடம் பெற்ற விழாவின் போது விருதும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது... அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நான், ருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் (அமர்ந்திருப்போர்) - எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் (பின்வரிசை) விபரம் - Others View பக்கத்தில் 

 நான் என்பது நான் மட்டுமல்ல...

 இங்கே எழுதப்பட்டிருப்பவை ஒன்றும் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களும் அல்ல, நான் எழுத்துலக சுல்தானும் அல்ல.
 எழுத வேண்டும் எனத் தோன்றியவற்றை இங்கு பதிவு செய்துள்ளேன். இவற்றின் தரத்தை நிர்ணயிப்பவர;கள் வாசகர்களாகிய நீங்களே.
 காணாமல் போனவர்கள் (1999), என்னைத் தீயில் எறிந்தவள் (2008) ஆகியவை எனது கவிதை நூல்கள். ஈராக்கியக் கவிஞரான் ஜமால் ஜுமாவின் நெடுங் கவிதையை மொழிபெயர்த்து உன்னை வாசிக்கும் எழுத்து (2007) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். நான் எழுதிய சிறுவர் கதை நூல் புள்ளி (2007).
 தீர;க்க வர்ணம் எனுந் தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய பத்தியும் இங்கு வலையேற்றம் செய்யப்படுகிறது. கூடிய விரைவில் அது நூலாக்கம் பெறவுள்ளது.
 2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன்.
 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியது எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.

உலக சிற்றிதழ் சங்க இலங்கைக் கிளை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் 2009ம் ஆண்டுக்கான செயற்குழுவில் உபதலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.


 சரி.. இவனும் ஒரு மூலையில் கிடந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுங்கள்!

எனது நூல்கள்

காணாமல் போனவர்கள் - 1999
(கவிதைகள்)

உன்னை வாசிக்கும் எழுத்து - 2007
(நெடுங் கவிதை - மொழிபெயர்ப்பு)

புள்ளி - 2007
(சிறுவர் கதை)
ரூம் டு ரீட் நிறுவன வெளியீடு

என்னைத் தீயில் எறிந்தவள் - 2008
(கவிதைகள்)

அரச தேசிய சாஹித்ய விருது பெற்றது

 கறுக்கு - மொறுக்கு - முறுக்கு!- 2009
(சிறுவர் கதை)
ரூம் டு ரீட் நிறுவன வெளியீடு

வெளிவந்துவிட்டன...

தீர்க்க வர்ணம்
பத்திரிகைப் பத்திகளின் தொகுப்பு

ஸ்ரீலங்காவிலிருந்து

ஸ்ரீரங்கப்பட்டணம் வரை
பயண அனுபவங்கள்

 

On the way பக்கத்தில்....

புதிய பதிவு :

 ‘தப்பித்து வாழ்தல்’

சிறுகதைகள் பக்கம்

புதியது...

 


உங்கள் கவனத்துக்கு...

அன்புடையீர்

தீர்க்க வர்ணம்’ பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு நூல் பற்றிய பிரபல பத்திரிகையாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலைவாதி கலீல் அவர்களின் விமர்சனப் பார்வை others view பக்கத்தில்....

எனது நூல்கள் 

அஷ்ரஃப் சிஹாப்தீன்
எண்ணமும் எழுத்தும்

தமிழ்வாள் சுழற்றி - ஒரு
பட்டாம்பூச்சியில் ஏறி வந்து
இவர் வீசிய வரிகளில்
மருத நிலமெல்லாம் மணத்தன

தமிழ்க் கதவுகளின்
கவிதைக் குமிழ் திருகித் திறந்து
பளிச்சென்று வெளிச்சம் விழச் செய்த
எழுத்து விஞ்ஞானி இவர்

சுருக்கென்று குத்தும் - இவரது
குண்டூசி வரிகள்
நறுக்காகச் சில நேரம்
நண்டூரிச் செல்வதுண்டு

சிக்கென்று சிறைப்பிடித்த
இவரது சிறுமா வரிகள்
விழிகளை வியப்புக் குறியில்
கொழுவி விடுகின்றன

மின்மினித் தமிழ் தொட்டு
சூரியப் பிரகாசம் செய்வதும்
பேனை இல்லையெனினும்
வானவில்லைப் பிடித்து
தீர்க்க வர்ணம் காட்டிவிடுவதும்
இவரது தமிழியல்பு

வானொலியில் தமிழ் உச்சரிப்பது
இவரது தனிப் பாணி
தாள்களில் தமிழ் அச்சடிப்பது
இவரது தமிழ்ப் பணி

பாடுபொருளை
மென் பொருளாக்கிக்
கணினிக்குள் வைத்துக்
கழுவிப் பார்க்கின்ற
கவிஞர் இவர்

மந்திரத் தமிழில்
எந்திரம் செய்து
தாயகத்துக்குத்
தாயத்துக் கட்டுகின்ற
எழுத்துச் சித்தர் இவர்
ஆயின் அநீதி காணில்
உக்கிரப் புத்தர்

நேத்ராவில் தன் எழுத்தைக்
குரலாக மாற்றியும்
யாத்ராவில் தன் குரலை
எழுத்தாக மாற்றியும்
விந்தைகள் செய்கின்ற
வித்தைக்காரர் இவர்

இவரைத் தீயில் எறிந்தாலும்
காணாமல் போனவர் ஆகாமல்
சாம்பரிலிருந்து உயிர்த்தெழும்
பீனிக்ஸ் கவிஞரே

இம்மருத நிலத்தில்
மகரந்தத் தமிழ்த் தூவி
வரவேற்போம்
வா!

முஸ்லிம் தேச ஆய்வக ஏற்பாட்டில் 2008.12.13ம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நிகழ்ந்தேறிய  ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ மற்றும் ‘உன்னை வாசிக்கும் எழுத்து’ ஆகிய நூல்களின் அறிமுக விழாவின் போது அபாபீல்கள் கவிதா வட்டத்தின் செயற் சபை முதல்வர் தீரன் ஆர்.எம்.நௌஷாத் அவர்களால் வாசித்தளிக்கப்பட்ட கவி வாழ்த்து. 

Make a Free Website with Yola.