ashroff shihabdeen

காணாமற் போகா தவன்

தொட்டாற் றுலங்கும் தொடர்கருமம் ஆளுமையால்
வெட்டொன்று துண்டிரண்டு வார்த்தைதனில் - மட்டில்
திறங்கொண்ட செல்வன் தமிழாளும் வல்லோன்
அறம்வாழும் சொல்கவிகள் தேன்

‘முஹம்மதென் றேயெழுதி மூக்கில்கை வைத்தேன்
கமழ்ந்ததில் கஸ்தூரி வாசம்’ - பகர்ந்தான்
கவியரங் கொன்றின்கண் கேட்டோர்நெஞ் சார்த்தார்
செவிகொண்ட சொல்வீச்சி னால்

உலகத் தமிழ்மாநா டொன்றெங்கள் மண்ணில்
நலமே நடாத்தி முடித்தோம் - சிலரேதான்
ஆணிவேர் போல அவனிருந்தான் என்றனுக்குப்
பூணுங் குழுத்தலைலைமைப் பேர்

தாங்குஞ் சுமைபெரிது தானெனினும் நெஞ்சுரத்தால்
தாங்கிநிறை வேற்றும் துணிவுடையான் - பாங்குறவே
அஷ்ரப் சிஹாப்தீன் அருகிருந்தால் கல்லெனினும்
விசுவப் பிரமம் பெறும்

‘காணாமல் போனவர்கள்’ கொள்கவிகள் அன்னவன்றன்
வாணாள் புகழுக்கு வித்தாகும் - பூணுமிந்நூற்
பாக்கள் அணிசேர்க்கும் பின்னொருகால் நாமத்தைக்
கோக்கும் சரித்திரத்திற் றான்

‘யாத்ரா’ கவிதை இலக்கியத்தின் சஞ்சிகையாய்
கோத்தளி;க்கும் பங்கிற்றன் காலூன்றப் பூத்தனவாம்
நன்றே பலபூக்கள் நல்முத்தின் பாங்குபெறும்
பொன்றாப் படைப்பேற்ற லால்

பத்தி எழுத்தில் பதம்பதித்து வாசகரின்
புத்திக்குத் தீனி பகிர்ந்தளிப்போன் - சத்தான
சேதிகளைக் கோத்துத் தெளிந்த மொழிநடையில்
ஓதுவது போற்றற் குவப்பு

வானொலி யின்வர லாற்றில் பெயர்சொல்ல
ஆனவர்கள் நிற்சிலரே அன்னவருள் - தேனாகச்
செந்தமிழை உச்சரிக்கும் சீர்மை ஓர்சிலர்க்கே
சொந்தமவ ருள்ளிவனுந் தான்

தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தியுரைப் பாருள்
நிலைபெற்ற காலமொன் றுண்டு - கலைப்பணியும்
ஆற்றியுள்ளான் நம்பி அறிவுக் குகந்தவையாம்
போற்றும் படியமைந்த சீர்

பொய்யாப் புகழ்ச்சி புகலான் புகன்றிடுங்கால்
மெய்யுரைப்ப தன்றி மிகைப்பதில்லை - துய்யநல
நட்பினுக்கு ஏற்றவொரு நம்பியிவன் அன்னவன்றன்
பெட்புரைத்தல் என்றன் கடன்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

இன்னொரு உயிர்

தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

சோலைக்குள் சென்றேன்
என் கண்களுக்குள்
புலப்பட்டவை பூக்களல்ல
உன் புத்தகங்கள்

வீட்டுக்குள் சென்றேன்
விழியால் பருகினேன்
கண்ணார் மனைவியையல்ல
உன் கவினார் கவிதைகளை

உன் எழுத்தெனும் மங்கை
எதிர்ப்பட்டாள்
என் பழைய இளமை
திரும்ப வந்து
திக்குமுக்காடிப் போனது

ஆரம்பிக்கும்
அடுத்தடுத்த வரிகள்
பெண்ணின் தங்கக்
கொலுசுக் கால்கள் போல்
கூர்ந்து கவர்ந்தன
முடிவைப் பார்த்தேன்
முக்காடு நீக்கிய
மாமன் மகள்

உன் நூல்கள்
என் உயிருக்கு
இன்னொரு உயிர் தந்தன

அஷ்ரஃப் சிஹாபுத்தீன்
நீ விடிந்தாய்
ஊருக்கல்ல,
உலகுக்கு

நீ கனிந்தாய்
இம்’மைக்கு மட்டுமல்ல
மறுமைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்!

ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை

November 25, 2010

பயனுள்ளவை என்று கருதுபவற்றை ஏனையவர்களும் பயனடையும் வகையில் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தின் விளைவாகவே இலக்கியங்களும் பிற நூல்களும் தோன்றுகின்றன. புதிதாக அறிந்ததை, அனுபவித்ததை, சிந்தையைக் கவர்ந்ததை எழுத்தாற்றல் படைத்தவர்கள் ஏனையவர்களுடன் சுவைபடப் பகிர்ந்து கொள்கின்றனர்.

 அந்த வகையில் நாடறிந்த கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன், தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை’ என்ற தொடர் பயணக் கட்டுரையை தொகுத்து நூலுருவில் எமது கரங்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை, கவிதை, பத்தி எழுத்து என பல துறைகளிலும் முத்திரை பதித்த அஷ்ரஃப் சிஹாப்தீன் பயண இலக்கியத்திலும் ஆளுமையுள்ள எழுத்தாளர் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

 அண்மையில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘தீர்க்க வர்ணம்’, ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவின் போது கவிதாயினி லுணுகல ஸ்ரீ பாடிய கவி வாழ்த்து அஷ்ரஃப் சிஹாப்தீனின் எழுத்தாற்றலைக் கூறும் அழகிய கவி வரிகளாகும்.

இரை மீட்டும் பசுவாய்
இருந்து அசை போட
ஆறு மாதம் வேண்டும்
ஆகக் குறைந்தது...
ஊமையான சொற்கள் கூட
தேனீயாய்ப் பறக்குமே அந்த
சூட்சுமத்தைக் கொஞ்சம்
சொல்லித் தருவாயா?

 சொற்களுக்கு இறக்கை கட்டும் கலை தெரிந்த ஆசிரியர் சுவாரஸ்யம் குன்றாமல் நகைச் சுவை இழையோட அவருக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார். இயல்பான அவரது எழுத்தாற்றல் காரணமாக பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை அழைத்துச் செல்கிறார்.

 நூலின் பின் பக்க அட்டையில் நாடறிந்த கவிஞர் கலாபூஷணம் அல் அஸ_மத் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 “அஷ்ரஃப் சிஹாப்தீன் எனும் பெயர் இலக்கியக் காற்றில் இரண்டறக் கலந்திருக்கிறது. கவிதைச் சிறகுடன் இவர் எழுத்து வானில் நுழைந்த கையோடு வானலைச் சிறகும் இணைந்து பயணத்தை விரிவு படுத்தியது. சிறுகதைக் காலுடன் இவர் இலக்கிய நிலத்தில் நடந்த போது கட்டுரைக் காலும் அணி சேர்த்தது. சொல் - சொல்பவரின் ஆளுமையால் சுவையும் சோதியும் பெறுகிறது. சேதியும் சொல்கிறது. இந்நூலில் அதை நாம் காணலாம்” என்கிறார்.

 வழமையான பயணக் கட்டுரைகளில் ஓர் இலக்கியவாதி அல்லது எவரோ ஒருவர் பயணஞ் செய்திருப்பார். அவர் அனுபவங்களைக் கூறுவார். ஆனால் ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ பயண நூலானது நான்கு இலக்கியவாதிகளின் அல்ல.... நான்கு இலக்கிய ஜாம்பவான்களின் கூட்டுப் பயண அனுபவங்களின் வெளிப்பாடாகும். இந்நூலில் இலக்கியத் தகவல்கள், வரலாறுகள் ஏராளமாகக் காணப்படுவதற்குக் காரணம் இவர்களின் இலக்கியக் கூட்டமென்றால் மிகையல்ல.

 பயண இலக்கியத்தில் ஆரம்பமே ஆர்ப்பாட்டத்துடன் நகர்கிறது. அஷ்ரஃப் சிஹாப்தீன் கூறுகிறார்;:-

 “எங்களது நால்வரது அணியின் ஆட்சித் தலைவராக ஜின்னாஹ்வும் கணக்கு வழக்கு மற்றும் நலன்புரி இயக்குனராக அல் அஸ_மத்தும் பிரதம நீதியரசராக தாஸிம் அகமதுவும் சக்தி மிக்க எதிர்க் கட்சித் தலைவராக நானும் மானசீகமாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம்.”

 வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியவராக சரளமாக உரையாடுவது போன்ற அவரது எழுத்தானது எம்மையும் அவர்களுடன் இழுத்துச் செல்கிறது. எம்மை முதலில் கேரளாவில் படகுச் சவாரி செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். கோழிக் கோடு என்று அழைக்கப்படும் கள்ளிக் கோட்டைக்கு வஸகொடகாமா வந்தது, கள்ளிக் கோட்டைக்கு ஹைதர் அலி படையெடுத்தது போன்ற வரலாற்றுத் தகவல்களை அள்ளி வழங்கிக் கொண்டே ஆலப்புழைப் படகு வீட்டின் இனிய அனுபவங்களைக் கூறுவதுடன் அரிய பல இலக்கியத் தகவல்களையும் தருகிறார். கேரள எழுத்தாளர்களான தகழி சிவசங்கரன், வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்கிறோம்.

 சந்தனத்துக்கும் பட்டுக்கும் பெயர் போன மைசூரின் பயண அனுபவங்களை மணக்க மணக்கக் கூறுகிறார். மைசூர் மகாராஜாவின் மாளிகை வனப்பையும் வரலாற்றையும் சுவைபடக் கூறும் எழுத்தாற்றல் அவரது தனிச் சிறப்பாகும்.

 அந்நிய நாட்டவனுக்கு அடிபணிய மறுத்த மைசூர் புலி திப்பு சுல்தானின் வீர வரலாறு பற்றி அரிய தகவல்களும் வரலாற்றுத் தடயங்களின் புகைப்படங்களும் நூலுக்கு அணி சேர்க்கின்றன. திப்பு சுல்தானின் கோட்டைப் பிரதேசமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ள அருங் காட்சியகத்தில் காணப்படும் திப்புவின் வாட்கள், பீரங்கி என்பவற்றுடன் கும்பாஸ் எனப்படும் திப்புவின் கல்லறை, திப்பு கட்டிய பள்ளிவாசல் போன்றவற்றைக் காணும் போது ஒப்பற்ற வீரன் திப்புவின் வீரத்தை எண்ணி உடல் சிலிர்க்கிறது.  இவற்றையெல்லாம் நேரில் காண வேண்டும் என்கிற எண்ணம் துளிர்க்கிறது.

 எம்முள் இந்த எண்ணத்தைத் துளிர் விடச் செய்வதே ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ என்ற இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

யாழ். அஸீம்
நன்றி: விடிவெள்ளி -25.11.2010பயனுள்ளவை என்று கருதுபவற்றை ஏனையவர்களும் பயனடையும் வகையில் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தின் விளைவாகவே இலக்கியங்களும் பிற நூல்களும் தோன்றுகின்றன. புதிதாக அறிந்ததை, அனுபவித்ததை, சிந்தையைக் கவர்ந்ததை எழுத்தாற்றல் படைத்தவர்கள் ஏனையவர்களுடன் சுவைபடப் பகிர்ந்து கொள்கின்றனர்.

நன்றி: விடிவெள்ளி -25.11.2010

‘தீர்க்க வர்ணம்’

September 8, 2010

அஷ்ரஃப் சிஹாப்தீனின்
‘தீர்க்க வர்ணம்’
ஒரு வெட்டு முகம்

- கலைவாதி கலீல் -

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘தீர்க்க வர்ணம்’ என்ற நூல் என் கரம் எட்டியது. ‘தினகரன்’ வாரமலரில் அவர் வாராவாரம் எழு�...

Continue reading...
 
என்னைத் தீயில் எறிந்தவள்

April 14, 2010

என்னைத் தீயில் எறிந்தவள்
  
- வெம்மைத் துளிகள்

அஷ்ரஃப் சிஹாப்தீன் அரசியல் கவிதைகளுக்கானவர். இந்த அறிமுகம் அவருடைய கவிதைகளுக்கு மிகவும் பொருந்திப் போகுமென நினைக்கிறேன். அவரது இரண்டாவது ...

Continue reading...
 
அஷ்ரஃப் சிஹாப்தீனின்

April 14, 2010

என்னைத் தீயில் எறிந்தவள்’
கவிதைத் தொகுதி மீதான வாசிப்பு

“அனேகமாகவும் மௌனமாயிருக்கிறேன்” எனத் தொடங்குகிறது அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘பைத்தியப் பேச்சு’ என்ற கவிதை. கவிஞனின் மௌனம் கூட ஓர�...

Continue reading...
 
பாராட்டு நிகழ்வு

November 12, 2009

‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கடந்த 06.11.09 அன்று ஒரு பாராட்டு வைபவத்தை ...

Continue reading...
 
சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழா

June 17, 2009

அஷ்ரஃப் சிஹாப்தீனின் இருநூல்கள்
சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழா

“இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையான உறவு மிகவும் தொன்மை வாய்ந்தது. அது காலத்தால் பரீட்சிக்கப்பட்டது” என்ற�...

Continue reading...
 
உன்னை வாசிக்கும் எழுத்து

June 17, 2009

உன்னை வாசிக்கும் எழுத்து

 -விம்பமும் விளிம்பும்

அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒரு விருந்தாகத் தந்திருப்பது இவருடைய மொழிபெயர்ப்பு நூல் - ஜமால் ஜூமாவின் ‘உன்னை வாசிக்கும் எழுத்து.’  நீண்ட கவிதையின...

Continue reading...
 
“என்னைத் தீயில் எறிந்தவள்.”

June 17, 2009

ஈழத்து முஸ்லிம்களின் தமிழ்க் கவிதைப் போக்கில் மற்றுமொரு ஆரம்பம் -
“என்னைத் தீயில் எறிந்தவள்.”

நவமணி பிரதம ஆசிரியர் மர்ஹ{ம் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ராஜேஷ்வரி சண்...

Continue reading...
 
Categories

Make a Free Website with Yola.